இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஆசிய அபிவிருத்தி வங்கியானது நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கடன்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அந்தத் தொகையில், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் பின்தங்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 மில்லியன் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும் ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
எனவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவது முக்கியம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.



