சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆலோசனை!

#sri lanka tamil news #Tamil News
Dhushanthini K
1 year ago
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆலோசனை!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றனர். 

இதன்படி நாளை (19.03) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளதுடன் மறுநாள் மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

இந்த பிரேரணையை தோற்கடிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தற்போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் தரப்பு இரகசிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் இல்லங்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

இந்த பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  

எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்காக ஆளும் கட்சி எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அந்த பேச்சுக்கள் வெற்றியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!