பேக்கரி உற்பத்திகள் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி: வெதுப்பக உரிமையாளர்கள் கவலை
#SriLanka
#prices
#Food
Mayoorikka
1 year ago

பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25 சதவீதத்தால் குறைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்டது. இதற்கு இணையாக பாண், கேக் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையும் உயர்த்தப்பட்டது.
இதன்காரணமாக வெதுப்பக உற்பத்தி பொருட்களின் கேள்வியும் குறைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



