புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!
#SriLanka
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து நேற்று (16.03) காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.