வழிப்பாட்டிற்காக பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : ஒருவர் பலி!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வழிப்பாட்டிற்காக பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : ஒருவர் பலி!

நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபாடு செய்ய வந்த 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பேராதனை யஹலதன்ன பிரதேசத்தில் கொப்பேகடுவ சந்தியில் நேற்று (16.03) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பக்தர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து  நெல்லிகலையில் இருந்து புடலுஓயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சாய்வில் சறுக்கி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹல்பொல, புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!