வெடுக்குநாறி விவகாரம்: வவுனியாவில் திரண்ட மக்கள்: பேரெழுச்சியுடன் போராட்டம்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கைது செய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமாகி எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.
தற்போது இந்த ஆர்பாட்ட பேரணியானது வுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து தொல்பொருள் திணைக்களம் வரை நகரவுள்ளது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறவுள்ள வவுனியா பழைய பஸ் தரிப்பு நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகமடக்கும் படையினர் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்ச நிலையுடன் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை வவுனியாவில் இடம்பெறவுள்ள எழுச்சிப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இன்று(16) காலை வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



