இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ்வழிபாட்டுப் பயிற்சிக்கூடம் திறப்புவிழா!

#SriLanka #Jaffna #Temple
Mayoorikka
1 year ago
இணுவில்  ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ்வழிபாட்டுப் பயிற்சிக்கூடம் திறப்புவிழா!

யாழ். இணுவில் தெற்கு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்,"தமிழ்வழிபாட்டுப் பயிற்சிக்கூடம்" திறப்பு விழா எதிர்வரும் 20.03.2024, புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 தமிழைத் தெய்வத்தமிழ் என்று அருளாளர்கள் அழைப்பர். வேறு எந்த மொழியும் இப்படித் தெய்வத்தோடு இணைத்துப் பேசப்படும் சிறப்பைப் பெறவில்லை. சைவநெறிக்கூடம் திருக்கோவில்களில் கருவறையில் தெய்வத்தின் முன் தெய்வத் தமிழை மீள்மீட்கும் பெரும் பணியில் தொடர்ந்து தமிழை தன் இன்செவியில் விரும்பிக் கேட்கும் ஞனாம்பிகை உடனாய ஞானலிங்கர் அருளால் மேற்கொண்டு வருகின்றது. 

images/content-image/2023/03/1710560772.jpg

 இவ்வழியில் 20. 03. 2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு தமிழ்வழிபாட்டுப் பயிற்சிக்கூடத்தினை இலங்கை, யாழ். இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் திறந்துவைக்க குருவருளும் திருவருளும் நிறைந்துகூடியுள்ளது. இவ்வேளை அன்பர்கள் அனைவரையும் வருகை அளிக்க உள்ளம் நிறைந்து அழைக்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!