வைத்தியசாலையில் போலி வேடமணிந்து நகைகளை திருடிய நபர்
#SriLanka
#Hospital
#doctor
#Robbery
#Jewelry
Prasu
1 year ago

நிக்கவரெட்டிய வைத்தியசாலையின் சிறுநீரக மருத்துவப் பிரிவுக்கு பரிசோதனைக்காக சென்ற பெண்ணிடம், தன்னை ஒரு வைத்தியர் என கூறிக்கொண்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் தங்க நகைகளை அபகரித்து தப்பிச் சென்றுள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரின் நகையே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தகவல் கோரியுள்ள நிலையில் ஏனைய நோயாளர்களை பார்வையிடுமாறு வைத்தியசாலையில் இருந்த சில பணியாளர்களை அறிவுறுத்திய பின்னர் அந்த பெண்ணை பரிசோதனைக்காக தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் , அந்த பெண்ணிடம் பரிசோதனைக்கு முன்னதாக நகைகளை கழற்றிவிடுமாறு கூறி அவரை ஏமாற்றி நகைகளை திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



