எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் விமல் வீரவன்சவின் தேர்தல் பிரச்சாரம்

#SriLanka #Election #Parliament #Wimal Weerawansa #President
Lanka4
1 year ago
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் விமல் வீரவன்சவின் தேர்தல் பிரச்சாரம்

இந்த வருட இறுதிக்குள் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன பல்வேறு பகுதிகளிலும் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை பொதுஜன பெரமுன கட்சியும் தமது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, எதிர்வரும் 23 ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட மக்கள் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

 அத்துடன், ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!