மீன ராசியினருக்கு ஜென்ம ராகு, சூரியனால் வேலை பளு அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மீன ராசியினருக்கு ஜென்ம ராகு, சூரியனால் வேலை பளு அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: செயல்களில் ஏற்பட்ட தடை இன்று நீங்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். கார்த்திகை 1: எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். பழைய பிரச்னைகளை முடிவிற்கு வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மனதில் குழப்பம் உண்டாகும். சூரியனால் முயற்சி வெற்றியாகும். உத்தியோக நெருக்கடி நீங்கும். ரோகிணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை சீராகும். மிருகசீரிடம் 1,2: வியாபாரம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். அரசுவழி முயற்சியில் லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். திருவாதிரை: புதிய சிந்தனை மேலோங்கும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உண்டாகும். வரவு செலவில் கவனம் தேவை. புனர்பூசம் 1,2,3: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர். எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் நிறைவேறும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆயில்யம்: உத்தியோக நெருக்கடி குறையும். வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய புதிய திட்டமிடுவர்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில இருந்த தடை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் வழியில் லாபம் காண்பீர். பூரம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். செயல்களில் நன்மைகளைக் காண்பீர். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: மனதில் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நேற்று வரை இருந்த சங்கடம் விலகும். தடைபட்டிருந்த வருவாய் வரும். குடும்பத்தினர் முயற்சிக்கு ஆதரவாக இருப்பர். அஸ்தம்: நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். சித்திரை 1,2: இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். போட்டியாளர்களால் சில பிரச்னை உருவாகும். சுவாதி: நேற்றைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும். மனதில் தேவையற்ற பயம் தோன்றும் நாள். விசாகம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: வழக்கத்தை விட தைரியம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். குடும்ப நெருக்கடி விலகும். அனுஷம்: வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர். தொழிலில் இருந்த சங்கடம் விலகும். கேட்டை: நீண்டநாள் திட்டம் நிறைவேறும். நண்பர்கள் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவீர்கள்.

தனுசு

மூலம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மறைமுகத் தொல்லை விலகும். நண்பர்கள் அனுசரணையாக செயல்படுவர். பூராடம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் உண்டாகும். உத்திராடம் 1: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்கள் லாபமாகும். எதிரி தொல்லை நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரச்னையை உண்டாக்குவர். திருவோணம்: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். தொழிலில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வேலைபளு உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனை தோன்றி மறையும் நாள். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் விருப்பம் போல் செலவு செய்வீர். நேற்றைய முயற்சி பலிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இழுபறி உண்டாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மவுனம் தேவை.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சிகள் லாபமடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும். உத்திரட்டாதி: உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்ததை அடைவீர்கள். பணவரவில் இருந்த தடை விலகும். ரேவதி: வெளியூர் பயணத்தில் ஆதாயம் தோன்றும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.