அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பணிபுரியும் பகுதிகளில் உள்ளவர்கள் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளவும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.