நாட்டின் பிரதான சுற்றுலா நகரமாக காலியை மாற்ற நடவடிக்கை!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டின் பிரதான சுற்றுலா நகரமாக காலியை மாற்றவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி ஹொலுவாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலி கோட்டையை சூழவுள்ள பல அரச அலுவலகங்கள் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.சுற்றுலா வர்த்தகத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும், அதை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு பெரிய இடம் தெற்கில் உள்ளது. தெற்கில் பிரதானமானது காலி நகரில் உள்ளது. காலி கோட்டையில் உள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்களும் அகற்றப்பட்டு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



