வங்கிகள் பொருத்தமான சந்தர்ப்பங்களிலேயே பரேட் சட்டத்தை பயன்படுத்தும் என அறிவிப்பு!

தற்போதுள்ள சட்டங்கள் பாராளுமன்றத்தினூடாக திருத்தப்படும் வரை, வங்கிகள் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரேட் தீர்வைப் பயன்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹிகுராக்கொட, கல்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றை அரச சார்புடைய வங்கியொன்று நேற்று (12.03) ஏலம் விட்டு, அதனைக் கையகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
2019ஆம் ஆண்டு, பாதியில் முடிக்கப்பட்ட இந்த ஹோட்டலின் பத்திரம் வங்கியில் அடகு வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் 2019ஆம் ஆண்டு 80 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் உள்ளிட்ட சூழ்நிலைகளால், அவரால் கடன் தொகையை செலுத்த முடியாததால், அதை ஏலம் விட வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி நேற்று மதியம் அந்த ஹோட்டலை வங்கி 140 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது, ஆனால் கொள்வனவு செய்யயாரும் முன்வராததால் ஹோட்டல் கையகப்படுத்தப்பட்டது.
பரேட் சட்டத்தை 10 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னணியில், ஹோட்டலின் உரிமையாளர் இவ்வாறு செய்ததற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.



