ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு கோரிக்கை!

#SriLanka #IMF #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு கோரிக்கை!

 உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு தடை விதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்திற்கு,  மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. 

சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு உரிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.  

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்ட தொடர்புடைய சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14.03) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் படை தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின்  பொருளாதார சபையின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுவதாக  சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!