கன்னி ராசியினருக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
கன்னி ராசியினருக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். பரணி: நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையை முடிப்பீர். நெருக்கடி விலகும். நிதி நிலை உயரும். கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்னைகளை எதிர் கொள்வீர். ரோகிணி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அந்நியரால் வேலை நடக்கும். மிருகசீரிடம் 1,2: வேலையில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும். தொழிலில் போராடி வெற்றிபெறுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும். திருவாதிரை: தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் செயல் வெற்றியாகும். தடைப்பட்ட வேலை நடக்கும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்கள். பூசம்: உங்கள் மனதில் இருந்த குழப்பம் விலகும். முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: தொழிலில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்ட செயல் நடந்தேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வார். பூரம்: கவனமுடன் செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வரவு வரும். உத்திரம் 1: உங்கள் செல்வாக்கு உயரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும் நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். உறவுகள் வழியிலும் சங்கடம் ஏற்படும். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். எதிர்பார்த்த லாபத்தில் தடை உண்டாகும். சித்திரை 1,2: நீங்கள் மேற்கொள்ளும் செயலுக்கு கடுமையாக உழைக்க வேண்டி வரும். எச்சரிக்கை அவசியம்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் தீரும் நாள். சுவாதி: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வெளியிடத்தில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: மனக்குழப்பம், தொழிலில் உண்டான போட்டி அகலும். எதிரி உங்களிடம் இருந்து விலகிச் செல்வர். அனுஷம்: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். இரண்டு நாட்களாக இழுபறியான பிரச்னை முடியும் நாள். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். உங்கள் முயற்சியில் லாபம் ஏற்படும்.

தனுசு

மூலம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பூராடம்: உறவினர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உத்திராடம் 1: உங்கள் செயல்கள் லாபமடையும். குடும்பத்தினர் உதவியால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். ஜீவன ஸ்தான தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் முயற்சி லாபமாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் குழப்பம் உண்டாகும். சதயம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். வரவு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்களுக்குள் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: குரு சந்திரன் இணைவால் உங்கள் சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த வரவு உண்டாகும். வழக்கமான செயல்களில் லாபம் அதிகரிக்கும் நாள்.