ரஃபாவிலும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!

#SriLanka #Israel #War #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரஃபாவிலும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!

சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், தெற்கு காசா பகுதியில் பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமான ரஃபாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இஸ்ரேலை ஆதரிக்கும் AIPAC காங்கிரஸில் இணைந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்த அமைப்பு ஜனாதிபதி ஜோ பிடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியுள்ளது.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,காசா பகுதியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தப்பியோடியவர்கள் உட்பட சுமார் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்போது ரஃபா பகுதியில் தங்கியுள்ளனர்.  

ரஃபா ஆபரேஷன் குறித்து பேசிய நெதன்யாகு, பொதுமக்களை பாதிப்பின்றி வெளியேற்றிய பிறகு, ரஃபா நடவடிக்கையை மேற்கொண்டு, நடவடிக்கைகளை முடிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!