அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் : ஜெனிற்றா வலியுறுத்தல்!

அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டிய தேவை தற்போது ஏற்ப்பட்டுள்ளதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (13.03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீதிக்கான பொறிமுறைகளை தேடும் நோக்குடன் ஜனநாயக போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அறவழியான போராட்டங்களை கூட நசுக்கும் வகையான உத்தரவுகளை வழங்கி கைதுசெய்யும் செயற்பாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இது ஒரு மோசமான நிலையினையே காட்டுகின்றது. ஆலயத்தை வழிபடுவதற்கு கூட தமிழ்களுக்கு இன்று உரிமை இல்லை. இப்படியான நாட்டில் இனி நாம் எப்படி வாழமுடியும். வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை பொருட்கள் கூட சப்பாத்துகால்களால் தட்டிவிடப்பட்டது. அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து குரல் கொடுக்கவேண்டிய தேவை தற்போது ஏற்ப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலகத்தால் மரணச்சான்றிதழ் வழங்கும் விடயத்தை நாம் எப்போதோ நிராகரித்து விட்டோம். இருப்பினும் அப்பாவி மக்களை ஏமாற்றி வலுக்கட்டாயக பதியும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.
இவ்வாறானா கேவலமான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இருப்பினும் நாம் சர்வதேச நீதியை கோரி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம் எனக் கூறியுள்ளார்.



