4 வயது சிறுமிக்கு எமனாக மாறிய காய்ச்சல் மாத்திரை

#SriLanka #Death #children #Fever #Girl #tablets
Prasu
1 year ago
4 வயது சிறுமிக்கு எமனாக மாறிய காய்ச்சல் மாத்திரை

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!