மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#doctor
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டில் கடந்த சில காலமாக கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகின்ற நிலையில், மாணவர்கள் மற்றம் பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும்.
எனவே, பிள்ளைகளை வெளி நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்வதாயின் காலை வேளையில் அதனை மேற்கொள்ளுமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



