பிள்ளைகள் வழியே சில சங்கடங்கள் அடையும் விருச்சிக ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
பிள்ளைகள் வழியே சில சங்கடங்கள் அடையும் விருச்சிக ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இன்று உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத தடை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டாகும். அரசாங்க செயல்களில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சலும், குழப்பமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வரும். ரோகிணி: இழுபறியான செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு மகிழ்ச்சி தரும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்களால் நெருக்கடி உண்டாகும். அதை சமாளித்து வெற்றி பெறுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திருவாதிரை: முயற்சியில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் விருத்தியாகும். தொழிலில் உங்களுக்கு இடையூறு செய்தவர் விலகிச் செல்வர்.

கடகம்

புனர்பூசம் 4: உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர். பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: எதிர்ப்பு உண்டாகும். கவனமாக செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் அடைவீர். தேவையற்ற குழப்பம் நீடிக்கும்.

சிம்மம்

மகம்: எதிரிகளால் சங்கடங்களை சந்தித்தாலும் செயல் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். பூரம்: மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். இன்று புதிய முயற்சி வேண்டாம். உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அமைதி காப்பது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர். நட்புகளால் நன்மை அடைவீர். மனதில் இருந்த குழப்பம் போகும். அஸ்தம்: உங்கள் அணுகுமுறையால் நீங்கள் ஈடுபடும் செயலில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பாராத நெருக்கடி தோன்றினாலும் உங்கள் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: நேற்று நிறைவேறாமல் இருந்த ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: பிரச்னைகளை சமாளிப்பீர். திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்படும் நாள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். அனுஷம்: உங்கள் செயல் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும் நாள். கேட்டை: பிள்ளைகள் வழியே சில சங்கடங்களை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

தனுசு

மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உங்கள் தேவை நிறைவேறும். பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். திருவோணம்: செயலில் இருந்த தடை விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். சதயம்: பணவரவு திருப்தியளிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஒன்றிரண்டு சங்கடத்தை சந்திப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடம் தோன்றும். முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நண்பர்கள் உதவியால் எண்ணம் நிறைவேறும். ரேவதி: செயல்களில் கூடுதல் கவனம் தேவை. உறவுகளுடன் இருந்த சங்கடம் விலகும்.