புதிய சட்டத்திற்கு இந்திய பிரதமரை பாராட்டிய அமெரிக்க பாடகி
#India
#Women
#America
#government
#Law
#NarendraModi
#Singer
Prasu
1 year ago

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடியை அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய அரசாங்கத்தின் இரக்கமுள்ள தலைமைக்காகவும், மிக முக்கியமாக துன்புறுத்தப்பட்டவர்களை வரவேற்பதில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்தி யதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.



