இலங்கையில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 30 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 30 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. 

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 

30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!