மத்திய பாகிஸ்தானில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 09 பேர் பலி!
#SriLanka
#world_news
#Pakistan
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மத்திய பாகிஸ்தானில் இன்று (12.03) அதிகாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாக்கிஸ்தானில் கட்டிடங்கள் இடிந்து விழுவது பொதுவானது. அங்கு தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



