யானைகளைப் பாதுகாக்க 4500 உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை!

யானைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு அமைச்சிற்கு 4,500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிக்க நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இவர்களை திணைக்கள ஊழியர்களாக்கியதன் பின்னர் யானைகளின் பாதுகாப்பிற்கு வினைத்திறனான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட திருமதி பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ தற்போது யானை வேலியில் பணிபுரியும் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களே அந்த ஆட்களை பெற்றுக்கொள்வார்கள்.
புதிய பணியாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.பல்நோக்கு திணைக்கள ஊழியர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டு முழு ஆட்சேர்ப்பும் மேற்கொள்ளப்படும். " எனக் கூறியுள்ளார்.



