கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கால்நடை பண்ணையாளர்கள் மகஜர் கையளிப்பு!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம்  கால்நடை பண்ணையாளர்கள் மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக் குளம் திருவையாறு மேற்கு இரத்தினபுரம் குடியேற்ற திட்ட கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தருமாறு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் மகஜரொன்றை இன்று (11.03) கையளித்தனர்.  

இதன்போது, பண்ணையாளர்களின் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுவதற்குரிய வகையில் நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கனகாம்பிகைக் குளம் திருவையாறு மேற்கு இரத்தினபுரம் குடியேற்ற திட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்து குறித்த மகஜரை மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.  

குறித்த மகஜரை பெற்றுக் கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களோடு கலந்துரையாடியதன் பின்னர் இப்பிரச்சனை தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!