சிம்ம ராசியினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
சிம்ம ராசியினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: விரய சந்திரனால் இன்று எதிர்பாராத செலவு தோன்றும். வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். பரணி: திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீ்ர். குரு பகவானின் பார்வையால் எல்லாவற்றையும் சமாளிப்பீர். கார்த்திகை 1: உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு வழி முயற்சிகளில் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை சீராகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பாக்கிய சனியாலும் லாப குருவாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். திருவாதிரை: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: பொது நலனில் கவனம் செல்லும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும். பூசம்: திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். பொருளாதார நெருக்கடி விலகும். ஆயில்யம்: பணியாளர் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். கடன்களை அடைப்பீர்கள்.

சிம்மம்

மகம்: சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம். பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். முயற்சியில் கவனம் தேவை. உத்திரம் 1: வருவாயில் ஏற்ப்பட்ட தடை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க முயற்சி எடுக்கும் நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சித்திரை 1,2: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்ப்பு விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர் உங்கள் நீண்டநாள் முயற்சியில் வெற்றியைக் காண்பீர்கள். விசாகம் 1,2,3: தைரியத்துடன் செயல்படுவீர். பகைவர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம்: இழுபறியாக இருந்த தொழில் விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். கேட்டை: பிரபலம் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். நீங்கள் எண்ணியதை அடைவீர். கோயிலுக்கு செல்வீர்கள்.

தனுசு

மூலம்: மூன்றாமிட சந்திரனால் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வருவாய் கைக்கு வரும். பூராடம்: நெருக்கடி நீங்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் 1: மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர். இழுபறியாக இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மூன்றாமிட சந்திரனால் இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி அடைவீர். விருப்பம் நிறைவேறும். திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர். நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர். சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். உங்கள் முயற்சியில் தடைகள் ஏற்படும். உத்திரட்டாதி: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார். ரேவதி: முன்னோர் வழிபாடு உங்கள் சங்கடங்களைப் போக்கும். செயல்களில் நிதானம் அவசியம்.