கொழும்பில் ஒன்றுக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Dhushanthini K
1 year ago

தேசிய மக்கள் சக்தியின் மகளிர் தின நிகழ்வு இன்று (10.03) கொழும்பில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன இவ்வருடத்தில் நடைபெறும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதற்கான முன்னாயத்தங்களை கட்சிகள் மேற்கொண்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையை பொறுத்தவரையில், பிரதானமாக காணப்படுகின்ற கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க அண்மைக்காலமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பது உள்ளிட்ட பல விடயங்கள், அவருடைய அரசியல் நகர்வை தெளிவாக பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



