ரம்பேவ கார் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்!

ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கெப் சாரதி மற்றும் அதில் பயணித்த மேலும் இரு சந்தேகநபர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸார் சந்தேகநபர்களை இன்று காலை கைது செய்து அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
ரம்பேவ பிரதேசத்தில் நேற்று (09.03) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஓட்டிச் சென்ற கெப் வீதியில் பயணித்த ஐந்து பேர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.



