ஈழத்தமிழ் இளைஞர்களினை குறிவைக்கிறதா இந்திய சினிமா?

#SriLanka #TamilCinema #Tamil #Youngster #Ealam
Mani
1 month ago
ஈழத்தமிழ் இளைஞர்களினை குறிவைக்கிறதா இந்திய சினிமா?
ஈழத்தமிழர்கள் வரலாற்றில் சொல்ல முடியாத துயரங்கள் அனைத்தையும் அனுபவித்து உயிருக்கு பயந்து ஓடி வந்து வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து தமது முயற்சியினாலும் எப்படியாவது வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வெறித்தனத்துடனும் தமது கடுமையான உழைப்பினை செலுத்தி வெளிநாடுகளில் தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்தி வாழ்ந்து வருகின்றனர். சில இளைய சமுதாயங்களுக்கு தமது பெற்றோர் பட்ட கஸ்டங்கள் தெரியாமலேயே தமது வாழ்க்கையினை மிகவும் இன்பமாக கழித்து வருகின்றனர்.

இதனை கவனித்து கொண்ட சில இந்தியாவிற்கு கண்ணிற்குள் குத்துவது போல் அவர்களின வளர்ச்சி பிடிக்காமல் அவர்களின் வருமானங்களினை குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் சில களியாட்ட நிகழ்வுகளினை சில ஈழத்தமிழர்களின் உதவியுடன் நடாத்தி வருகுகின்றனர்.

ஆனால் ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இந்திய கலைஞர்களும் அதில் பங்கு பற்ற வேண்டும் என்றால் இந்தியா கலைஞர்கள் அதற்கு முன்வருவதில்லை.

இதன் தொடர்ச்சியாக லண்டனில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பாடகர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு பெரும் தொகை பணம் செலவு செய்து ஏற்பாட்டாளர்கள் ஒழுங்குபடுத்தி வருகின்றனர் இதற்கான டிக்கட்டுக்களும் அதிக விலையில் விற்பனையாகின்றது.

இவ்வளவு பெரும்தொகை பணம் செலவு செய்து தென்னிந்திய கலைஞர்களை புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் வரவழைத்து நிகழ்ச்சி செய்து அவர்களுக்கு பெரும் இலாபத்தினை அள்ளிக் கொடுக்கின்றனர். 

ஆனால் தென்னிந்திய கலைஞர்களால் ஈழத் தமிழர்களுக்கு நன்மை ஒன்றும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர ஈழத்தமிழர்களது பிரச்சனைகளில் தலையிடுவதில்லை மாறாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ஈழத்தமிழ் இளைஞர்களின் மனங்களினை சினிமா மோகத்தின் மீது மேலும் மேலும் ஆர்வமடையவே செய்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்களை பெரும் பணம் செலவழித்து அவர்களுடைய நிகழ்ச்சிகளை நடத்துவதில் என்ன நன்மை என ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை லண்டனில் அதே ஏப்ரல் மாதம் ஈழத்து புகழ் இசை கலைஞரான கில்மிஷாவின் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த இசைநிகழ்ச்சிக்கு அவ்வளவு பிரமாண்டம் மற்றும் வரவேற்பு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுகின்றன. கில்மிஷாவின் இசை நிகழ்ச்சியை குழப்புவதற்கு ஒருசாரார் அனுருத்தின் இசைநிகழ்ச்சியை வைப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில் புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் ஈழத்தில் உள்ள வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது ஆனால் அவர்கள் அதை செய்ய சில சந்தர்ப்பங்களில் தவறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் கலைஞர்கள் முன்வந்து ஏதாவது நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அவர்களினை கட்சிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமானவர்கள் அல்லது தமிழினத்துக்கு துரோகம் இழைத்தவர்கள் என எதேதோ காரணம் சொல்லி அவர்களினை புறக்கணிப்பதினையும் காணக்கூடியதாக உள்ளது.

அதேநேரம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரினால் தென்னிந்திய கலைஞர்களை வைத்து மிகப் பிரமாண்டமாக ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார்கள். அதற்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற சிலர் அந்த நிகழ்ச்சி தேவைதானா கலாச்சார சீர்க்கேடு என பல்வேறு விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள். ஆனால் லண்டனில் இவ்வாறான நிகழ்ச்சிகள் பெருமளவில் மிகப் பெரும் பிரமாண்டங்களோடு இடம்பெறுவதனை யாரும் கண்டுகொள்வதிலை. யாழ்ப்பாணத்தில் வைத்தால் அது ஏதோ கலாச்சார சீரழிவு என பொங்கி எழும் தமிழர்கள் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் பொழுது கண்டும் காணாமலும் உள்ளனர்.

ஈழத்தமிழ் பெற்றோர்கள் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சில எண்ணப்பாடுகளினை தமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க தவறுகின்றனர், அவர்கள் வசதியாக தாம் நினைத்த வாழ்க்கையினை வாழட்டும் என்ற எண்ணப்பாடுகளுடனும் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற ஒரு கருத்துடனும் தமது பொறுப்புக்களில் இருந்து விலகுகின்றனர்.

மாவீரர் நாள் என்ற ஒரு நாள் மட்டுமே அனவரும் ஈழத்தமிழர்கள் எனவும் அதற்காக தாம் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகின்றனர், ஆனால் இந்த தமிழ் இனம் ஒரு மாவீரர் நாளுக்காக மட்டும் போராடவில்லை என இளைஞர்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை.

யூதர்களினை உதாரணமாக எடுத்து நாம் வாழ வேண்டும் என ஈழத்தில் ஆர்வமுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர், 
அவர்களிடத்தில் அப்படி என்ன உள்ளது என கேள்வி கேட்கலாம்! யூத இனத்தின் ஒற்றுமையையும் அவர்களின் இலக்கில் அவர்கள் இன்றுவரை மாற்றமில்லாமல் வாழ்கின்றனர் என்பதினை நாம் கவனிக்க வேண்டும். யூதர்களின் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்கள் பட்ட கஸ்ரங்களினை நினைவுபடுத்திக்கொண்டே வாழ்க்கையை கடந்து செல்கின்றனர், தமது இனம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதினை தமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தே வழர்க்கின்றனர், இளைய சமுதாயமும் அதனை உணர்ந்தே வாழ்ந்து வருகின்றனர். உலக பொருளாதாரத்தில் இன்று மிகவும் முன்னிலையில் இருக்கும் அவர்கள் தமது பழைய காலத்தினை நினைவூட்டியே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் பணம் கிடைத்துவிட்டால் நாம் பட்ட கஸ்ர துன்பங்கள் அனைத்தினையும் மறந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தால் காணும் என்ற சுயநலத்துடனேயே வாழப்பழகி வருகின்றோம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகமான ஈழத்து இளைஞர்களுக்கு ஈழம் மீதான பற்று இல்லாமலே போய்விட்டது, அவர்கள் ஈழத்தில் என்ன நடக்கின்றது, என்ன நடந்தது என்ற ஒரு அக்கறையும் இல்லாமலே வாழப்பழகி வருகின்றனர்.

இப்படி இந்த இளம் சமுதாயம் மாறிப்போகும் நிலையில் இந்திய தமிழ் சினிமா மீதான அக்கறை மட்டும் ஊட்டப்பட்டு வருகின்றது, இதனை எவ்வாறு மாற்றுவது, இதற்கான மாற்று வழி என்ன என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும், இந்த களியாட்டங்களினால் என்ன நடக்கப்போகின்றது.

இவ்வாறு இந்த இளைஞர்கள் தொடர்ந்து சென்றால் கண்ட கனவுகள் அனைத்தும் காற்றில் கரைந்து விடும் சிந்தியுங்கள்!!!

இதேவேளை லண்டனில் அல்லது புலம்பெயர் தேசங்களில் இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் வரும் பணத்தினை ஈழத்தில் உள்ள வறுமைப்படும் மக்களுக்கு உதவினால் அதில் ஒரு நன்மை கிடைக்கும் என ஒரு சில ஆர்வலர்கள் கூறுவருகின்றனர். எனவே அவ்வாறான நிகச்சிகளை நடத்தி ஈழத்தில் இன்னல்படும் மக்களை வாழவைத்தால் அந்த நிகழ்ச்சியினால் நன்மை அடையலாம்.