வெடுக்குநாறி ஆலய சம்பவம் - தொடர் அழுத்தங்களுக்கு பிறகு சந்தேகநபர்கள் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Vavuniya #Court Order #Temple #Hospital #people
Prasu
1 year ago
வெடுக்குநாறி ஆலய சம்பவம் - தொடர் அழுத்தங்களுக்கு பிறகு சந்தேகநபர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நேற்று வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேச்சர ஆலய வழக்கில், காயமடைந்த சந்தேகநபர்களை நேற்றைய தினமே உடனடியாகச் சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்துமாறு நீதிமன்றால் கட்டளையிடப்பட்டது.

ஆனால் அவ்வாறு செய்யாது இன்று காலையே முற்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களைப் பார்வையிட்ட சட்டவைத்திய அதிகாரி, காயமடைந்த சந்தேகநபர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார்.

ஆனால் அதையும் மீறி மீளவும் சந்தேகநபர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வழங்கப்பட்ட தொடர் அழுத்தங்களை அடுத்துத் தற்சமயம் மீளவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தகவல். இற்றைவரை சந்தேகநபர்களுக்கு மாற்றுடை வழங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!