பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
#SriLanka
#Parliament
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஊடாக பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் சிரேஷ்டர்கள் குழு ஒன்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
தேவையான இடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடவும் முடிவு செய்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து கட்சியின் முக்கியஸ்தரிடம் தெரிவிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



