வாசனை பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வாசனை பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

மிளகு, ஏலக்காய், இஞ்சி, லவங்கம் உள்ளிட்ட வாசனை பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும்  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை முன்வைத்த யோசனைக்கு அமைய மேற்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அந்த பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டது. 

எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் மீள் ஏற்றுமதி செய்வதற்கும் நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

முதலீட்டுச் சபையின் பரிந்துரைகளின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முனைவோர் மட்டுமே மறு ஏற்றுமதிக்கான பொருத்தமான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  

உரிமம் வழங்குவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!