இலங்கை விமானப் படையில் சேர யாழ் இளைஞர்,யுவதிகளுக்கு அழைப்பு!
#SriLanka
#Jaffna
#Tamilnews
#sri lanka tamil news
#Air Force
Thamilini
1 year ago
இலங்கை விமானப்படையில் யாழ் இளைஞர்,யுவதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ள அவர், இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழில் இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.