சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் துலா ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் துலா ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். பரணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேதுவால் அல்லல் தீரும். கார்த்திகை 1: கவனமாக செயல்படுவீர். முயற்சியில் லாபம் காண்பீர். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். பத்தாமிட சூரியனால் செல்வாக்கு உயரும். ரோகிணி: உங்கள் செயல்களில் வேகம் உண்டாகும். மேற்கொள்ளும் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பர். மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர். வளர்ச்சிக்கு வழிதோன்றும் நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையில் முடியும். திருவாதிரை: பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை செய்துமுடிப்பீர். பணவரவு மகிழ்ச்சி தரும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: செயல்களில் சங்கடம் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். வருமானம் இழுபறியாகும். ஆயில்யம்: உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. மற்றவரிடம் வீண் விவாதம் வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானம் உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரம்: நண்பர்கள் உதவியுடன் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தடை விலகும். உத்திரம் 1: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகள் விலகிச்செல்வர். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அஸ்தம்: உறவினர்களால் உண்டான பிரச்னை தீரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். சித்திரை 1,2: செய்துவரும் தொழிலில் அக்கறை செலுத்துவீர். மறைமுகத்தொல்லை விலகும். துணிச்சல் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: பிள்ளைகள் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். சேமிப்பு உயரும். சுவாதி: வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். விலகிச்சென்ற உறவினர் இன்று உங்களைத் தேடி வருவார்கள். இறைவழிபாடு நன்மைதரும். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். அனுஷம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். கேட்டை: சொத்து வகையில் உண்டான பிரச்னையில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். 

தனுசு

மூலம்: சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். தடைப்பட்டிருந்த முயற்சி நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். திருவோணம்: தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும்.வருமானம் உயரும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். செயல் இழுபறியாகும். சதயம்: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை உண்டாகும். எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும். பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிப்பதுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும். ரேவதி: நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.