ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.