ஹுங்கம துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது
#SriLanka
#Arrest
#Murder
#GunShoot
#Criminal
Prasu
1 year ago

கடந்த 6ஆம் திகதி ஹுங்கம கஹந்தமோதர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுங்கம கட்டகடுவ ஏரிக்கு அருகில் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 27 வயதுடைய ரன்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



