கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டும் ரணில்!

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை வரும் (11.03)கூட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அதன் உயர்மட்டக் குழுவுடன் விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இக்கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள நபர்கள், அழைக்கப்பட்ட தலைவர்களுடன் இணைந்து பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று PMD கூறினார்.



