ஸ்ரீ பாத மலை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 03 தொன் பிளாஸ்டிக் பொருட்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஸ்ரீ பாத மலையை நோக்கி செல்லும் யாத்ரீகர்களால் கைவிடப்பட்ட சுமார் 03 தொன் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நல்லதண்ணியிலிருந்து ஸ்ரீ பாத உட மல்வ வரையான வீதியில் ஸ்ரீ பாத வந்தன காலம் ஆரம்பித்து மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்த பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.
பக்தர்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், சில யாத்ரீகர்கள் குப்பைகளை சுற்றுச்சூழலில் வீசுவுதாகஅவர் கூறினார்.
இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை நல்லதண்ணி குப்பை மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு சென்று தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.



