கடக ராசியினர் மேற்கொள்ளும் முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
கடக ராசியினர் மேற்கொள்ளும் முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களின் ஆலோசனை நன்மை தரும். பரணி: உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கார்த்திகை 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செலவு கட்டுப்படும். சட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த ஒரு வேலை முடியும். மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். தடைகளை சரிசெய்து வளர்ச்சிக்கு வழிகாண்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: தடைகளைத்தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர். உங்கள் முயற்சி லாபமாகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் இழுபறிநிலை உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: கவனமுடன் செயல்படுவதால் உங்கள் முயற்சி இன்று மாலை வரை லாபமடையும். பூசம்: தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ஆயில்யம்: உங்கள் பணிகளில் லாபநிலை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் போராடி வெற்றிபெறுவீர்.

சிம்மம்

மகம்: தொழிலில் இருந்த எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். உங்கள் முயற்சி நிறைவேறும். பூரம்: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். எண்ணம் எளிதாக நிறைவேறும். உத்திரம் 1: உடலில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர். எதிர்ப்புகளை முறியடித்து நினைத்ததை அடைவீர். அஸ்தம்: குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். சித்திரை 1,2: வியாபாரத்தில் சில பிரச்னை உருவாகும். தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர். வருவாய் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பநலனில் அக்கறை செலுத்துவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும். சுவாதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். திருமண வயதினருக்கு வரன் வரும். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். அந்நியர்கள் உதவியால் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி அடைவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுஷம்: செயல்களில் இருந்த தடை நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். பூராடம்: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். தெளிவாக செயல்படுவீர்கள். திருவோணம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். அவிட்டம் 1,2: செயல்களில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றி மறையும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளை சந்திப்பீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சதயம்: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர். பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர்.நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திட்டமிட்டு உங்கள் செயலில் வெற்றி அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர். ரேவதி: நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.