வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடு - மக்கள் மீது பொலிசார் அராஜகம்

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 07 பேர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு, இன்று மதியம் பிணையில் விடுதலையான ஆலய பூசகர் மதிமுகராசா, ஆலய நிர்வாக செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கிந்துஜன் உள்ளிட்டவர்களே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றதோடு பலரை அடாவடியாக கைது செய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 07 பேர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நாளை அல்லது திங்கள் அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.



