இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு: நெதர்லாந்து தூதுவர்
#SriLanka
#Women
Mayoorikka
1 year ago

இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.
இந்த நிலைமை வெகுவிரைவில் மாற வேண்டும் என நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகளவில் மக்கள் மத்தியில் சமூக வலைத் தளங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதமான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
என்றாலும்கூட ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்றார்.



