ஜனாதிபதி தேர்தலில் இருந்து முக்கிய பெண் வேட்பாளர் விலகல்

#Election #Women #America #President #Candidate
Prasu
1 year ago
ஜனாதிபதி தேர்தலில் இருந்து முக்கிய பெண் வேட்பாளர் விலகல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நிக்கி ஹேலி விலகவுள்ளார்.

இதனால், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாத்திரமே குடியரசுக் கட்சியின் எஞ்சியுள்ள ஒரேயொரு போட்டியாளர் ஆவார்.

தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநரும் ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவருமான நிக்கி ஹேலி, தனது தீர்மானத்தை தென் கரோலினா மாநிலத்தின் தலைநகர் சார்ள்ஸ்டனில் அறிவிக்கவுள்ளார்.

 இதுவரை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் வொஷிங்டன் டி.சி மற்றும் வேர்மண்ட் மாநிலத்தில் மாத்திரமே நிக்கி ஹேலி வெற்றியீட்டிய நிலையில் அவர் இப்போட்டியிலிருந்து விலகுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!