ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (07.03) மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
னாதிபதிக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் பேரணிகளை இந்த குழு ஏற்கனவே நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.