ஏமனின் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : மூவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Houthi
Dhushanthini K
1 year ago

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், கிளர்ச்சியாளர்கள் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
.
எனினும், சரக்குக் கப்பலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பணியாளர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என நம்பப்படுகிறது.



