மேஷ ராசியினருக்கு வேலை இடத்தில் பிரச்சனை விலகி சாதகமான நிலை உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மேஷ ராசியினருக்கு வேலை இடத்தில் பிரச்சனை விலகி சாதகமான நிலை உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைப்பட்டிருந்த வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பரணி: உங்கள் எண்ணம் பலிதமாகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகி சாதகமான நிலை உண்டாகும். கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தடைகளைத்தாண்டி உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சங்கடங்கள் விலகும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட நெருக்கடி உண்டாகாமல் போகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடிவரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியில் சங்கடம் உண்டானாலும் இறுதியில் வெற்றி அடைவீர். பண நெருக்கடி விலகும் திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு உண்டாகி மனதில் குழப்பம் ஏற்படும். ஏற்படுத்தும். முயற்சிகளில் தடை தோன்றும். புனர்பூசம் 1,2,3: திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்ப்புகள் விலகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். ஆயில்யம் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: முயற்சியில் வெற்றி காண்பீர். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரம் 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைகளை நீக்கி லாபம் அடைவீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். நிதிநிலை உயரும். கேதுவால் மனம் குழப்பமடையும். அஸ்தம்: குடும்பத்தினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். சித்திரை 1,2: எதிர்பாராத வருவாய் வந்து உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

சித்திரை 3,4: உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரியவரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: மற்றவர்கள் ஆலோசனைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் முயற்சிகளில் லாபம் காண்பீர். விசாகம் 1,2,3: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

விருச்சிகம்

விசாகம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். அனுஷம்: வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

தனுசு

மூலம்: குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டுவீர்கள். உத்திராடம் 1: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். திருவோணம்: உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்தவற்றில் தடையும் தாமதமும் உண்டாகும். சதயம்: உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும். பூரட்டாதி 1,2,3: செலவுகளால் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அதை சமாளிப்பீர். கையிருப்பு கரையும்.

மீனம்

பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நெருக்கடி குறையும். உத்திரட்டாதி: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். ரேவதி: வியாபார நெருக்கடி விலகும். விருப்பம் நிறைவேறும். முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.