காஸா போர் : ஹமாஸின் பிரதிநிதிகள் கெய்ரோ விஜயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காஸா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்க ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் எகிப்தின் கெய்ரோ வந்துள்ளனர்.
காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் பிரதித் தலைவர் கலீல் அல்-ஹியா தலைமையிலான குழுவொன்று எகிப்தை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இஸ்ரேலிய தூதுக்குழுவும் கெய்ரோவுக்கு வர உள்ளது.
காஸா பகுதியில் போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல தரப்பினரின் தலையீட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.