அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ: குழந்தைகள் பெண்கள் உட்பட 43 பேர் உயிரிழப்பு

#Death #Women #children #world_news #Bangladesh #fire
Mayoorikka
1 year ago
அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ: குழந்தைகள்  பெண்கள் உட்பட  43 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 தலைநகர் டாக்காவில் வியாழன்று (29) உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 கட்டிடத்தில் அமைந்துள்ள உணவகத்தில் முதலில் ஏற்பட்ட தீ, பின்னர் ஏனைய தளங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 75 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், 22 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 சுமார் இரண்டுமணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

 தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!