பிறரால் முடிக்க முடியாததை முடித்து காட்டும் தனுசு ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
பிறரால் முடிக்க முடியாததை முடித்து காட்டும் தனுசு ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னை தீரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நிதிநிலை உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும். ரோகிணி: உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பண நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். திருவாதிரை: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு செயலை முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த பண வரவால் சங்கடம் நீங்கும்.

சிம்மம்

மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். நன்றாக யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். அஸ்தம்: வீண்பிரச்னை உங்களைத்தேடி வரும். மற்றவரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்க வேண்டாம். சித்திரை 1,2: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். சுவாதி: அடுத்தவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விசாகம் 1,2,3: திடீர் செலவுகள் தோன்றும். நண்பர்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விசாகம் 4: உறவினர்கள் உங்களைத்தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனுஷம்: நீண்ட நாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். சங்கடங்கள் விலகும். பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்திராடம் 1: உங்கள் செயல் இன்று லாபமாகும். பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: பிறரால் சில சங்கடங்களை இன்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. சதயம்: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். ரேவதி: உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.