உலக சாதனை படைத்த அமெரிக்க பள்ளி மாணவி

#School #America #WorldRecord #Girl
Prasu
1 year ago
உலக சாதனை படைத்த அமெரிக்க பள்ளி மாணவி

சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது. சோபியாவை போலவே அவரது தாயாரும் உலக சாதனை படைத்துள்ளார். 

முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

சோபியா உலக சாதனையை தான் வசிக்கும் இடத்தில் உள்ள பொது நூலகத்தில் படைத்தார். 

முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை சோபியா முறியடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!