இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
#Death
#Hospital
#America
#Israel
#Embassy
#fire
Prasu
1 year ago

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் (வயது 25) காசா மீதான போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பியபடி அவர் திடீரென்று தீக்குளித்தார்.
அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார். படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் உயிரிழந்தார்



